Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட்டகாசமான டிசைனில் புதிய ஸ்கோடா சூப்பர்ப் அறிமுகம்!

செக் குடியரசின் கார் நிறுவனமான ஸ்கோடா தனது ஆல் நியூ ஸ்கோடா சூப்பர்ப் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் பஸாத், ஆடி ஏ4 கார்கள் உருவாக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் MQB தளத்தில் வந்துள்ள சூப்பர்ப் கார் முந்தைய தலைமுறை மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்டு அட்டகாசமான டிசைனில் முற்றிலும் புதிய அம்சங்களை பெற்று விளங்குகின்றது.

ஸ்கோடா கார்கள் வழக்கமாகவே தூரத்தில் இருந்து பார்க்கும் போது பிஎம்டபள்யு போலவும் ஆடி போலவும் தோற்றமளிப்பவை. தற்போது வந்துள்ள டிசைன் கிட்டதட்ட ஆடி, பிஎம்டபிள்யு போலவே தோற்றமளிக்கும் வகையில் உள்ளன.

தற்பொழுது வந்துள்ள ஸ்கோடா சூப்பர்ப் மாடல் முந்தைய மாடலை விட 75 கிலோ எடை குறைவாக முன்பக்க ஓவர் ஹேங் 61 மிமீ குறைவாகவும், 28 மிமீ நீளமாகவும், 47 மிமீ அகலமாக மற்றும் முந்தைய மாடலை விட கூடுதல் இடவசதி தரும் வகையில் 80மிமீ கூடுதல் வீல்பேஸ் பெற்றுள்ளது.
பை ஸெனான் முகப்பு விளக்குகளுடன் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள், டெயில் எல்இடி விளக்குகள், பிரிமியம் மற்றும் நவீன வசதிகளை வழங்கும் தொடுதிரை அமைப்புடன் கூடிய ஃபோக்ஸ்வேகன் MIB (MIB – Modularer Infotainment-Baukasten) இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேவிகேஷன், ஆண்டராய்டு, ஆப்பிள் ஆட்டோமோட்டிவ் ஆப்ஸ்களை பயன்படுத்தம் வசதி ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 5 பெட்ரோல் மற்றும் 3 டீசல் என்ஜின் ஆப்ஷனில் விற்பனையில் உள்ள ஸ்கோடா சூப்பர்ப் இந்தியாவில் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 2.0 டிடிஐ என்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்கும். முன்பக்க டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் வரவுள்ளது. சிகேடி முறையில் விற்பனைக்கு வரவுள்ள சூப்பர்ப் காரின் விலை ரூ.25 லட்சத்தில் தொடங்கும்.

இது மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. 1. ஸ்கோடா சூப்பர்ப் எலிகன்ஸ் 1.8 டிஎஸ்ஐ எம்டி - ரூ. 21,67,540, 2. ஸ்கோடா சூப்பர்ப் எலிகன்ஸ் 1.8 டிஎஸ்ஐ ஏடி - ரூ. 23,32,541, 3. ஸ்கோடா சூப்பர்ப் எலிகன்ஸ் 2.0 டிடிஐ சிஆர் ஏடி - ரூ. 26,27,541. இதில் பெட்ரோல் ரக கார் லிட்டருக்கு 13.1 கிமீட்டரும், டீசல் ரக கார் லிட்டருக்கு 17.2 கிமீட்டரும் மைலேஜ் கொடுக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ