Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்; சென்செக்ஸ் 378 புள்ளிகள் சரிவு!

கடந்த நான்கு தினங்களாக உயர்வுடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று (23.02.2016) சரிவுடன் முடிவடைந்தது.

 

 

இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 113.08 புள்ளிகள் சரிந்து 23,675.71-ஆகவும், நிப்டி 37.45 புள்ளிகள் சரிந்து 7,197.10-ஆகவும் இருந்தன.

 

இன்றைய வர்த்தக்த்தில் நுகர்வோர் பொருட்கள், வங்கி, மின்சாரம், பொதுத்துறை நிறுவனம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மூலதன பொருட்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் போன்ற நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தது. ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஷாங்காய் கூட்டு குறியீடு 1.26%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.62% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.48% சரிந்து காணப்பட்டது.

 

முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியது, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம் மற்றும் ஆசிய சந்தைகள் மந்தம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 378.61 புள்ளிகள் குறைந்து  23,410.18 என்ற நிலையில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  125.00 புள்ளிகள்  குறைந்து   7,109.55           என்ற நிலையில் நிறைவடைந்தது.
                
விலை அதிகரித்த பங்குகள்

ஏஷியன் பெயின்ட்ஸ் 877.10 0.72%
ஓஎன்ஜிசி 214.60 0.09%
 
விலை குறைந்த பங்குகள்

பேங்க் ஆப் பரோடா 132.95 -4.52
கெய்ர்ன் இந்தியா 126.20 -4.25%
கோல் இந்தியா 301.10 -4.08%
எஸ்பிஐ 158.50 -3.91%
பஞ்சாப் நேஷனல் வங்கி 72.70 -3.77%வு!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ