Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.599க்கு விமான பயணம்; ஸ்பைஸ்ஜெட் அதிரடி அறிவிப்பு!

நம் நாட்டில் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் புதிய கட்டண சலுகையை அறிவித்துள்ளது.


 

முன் கோடைக்கால சலுகையாக ரூ.599க்கு இந்திய நகரங்களுக்கிடையில் விமான பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது. இந்த சலுகைக் கட்டணத்தில் மார்ச் 01 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை பயணம் செய்யலாம். இதற்கான முன்பதிவு பிப்ரவரி 23 தொடங்கி 25 வரை நடக்கிறது. ஸ்பைஸ்ஜெட் ஆப்ஸ் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்துக்கு முன்பே இதுபோன்ற சலுகைகளை அளிப்பதன் மூலம் சுற்றுலா செல்பவர்கள் கோடைக்காலத்துக்கு முன்பே சுற்றுலாவுக்கு திட்டமிடுவார்கள் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஷில்பா பாட்டியா தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ