Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் எதிரொலி மீண்டும் சரிந்தது சென்செக்ஸ்!

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 379 புள்ளிகளாக குறைந்துள்ளதை அடுத்து, இன்று (24.02.12) காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 142 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.89 புள்ளிகள் சரிந்து 23,268.29 புள்ளிகளாக இருந்தது. ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஷாங்காய் கூட்டு குறியீடு 0.28%, ஹாங்காங்கின் ஹாங் செங் 1.37% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.65% சரிந்து காணப்பட்டது. உலோகம், வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனம் போன்ற நிறுவன பங்குகள் விலை 1.93% வரை குறைந்திருந்தது.
 

பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்று வருவதால் சென்செக்ஸ் சரிந்ததாக கூறப்படுகிறது. வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 321.25 புள்ளிகள் குறைந்து  23,088.93 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  90.85 புள்ளிகள்  குறைந்து   7,018.70 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
               
விலை அதிகரித்த பங்குகள்

பிபிசிஎல் 768.90 4.46%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 139.70 1.90%
எம் அண்ட் எம் 1,218.60 0.82%
பார்தி ஏர்டெல் 323.95 0.82%
யெஸ் பேங்க் 690.65 0.63%
 
விலை குறைந்த பங்குகள்

பிஎச்இஎல் 93.45 -5.08%
என்டிபிசி 118.65 -4.16%
டாடா மோட்டார்ஸ் 306.30 -3.85%
ஹிண்டால்கோ 66.40 -3.07%
வேதாந்தா 70.90 -2.94%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ