Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில்வே பட்ஜெட்: புதிய ரயில் இல்லை; கட்டணம் உயர்த்தப்படவில்லை! முழுவிவரம்

2016-17- ம்  நிதி ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை  இன்று ( 25.02.2016) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. இந்த பட்ஜெட்டில் புதிய ரயில் அறிவிப்புகள்  இல்லை. பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

முக்கிய அறிவிப்புகள்:-

44 புதிய ரயில்வே திட்டங்கள் ரூ. 92,700 கோடிக்கு திட்டமிடப்பட்டிருக்கின்றன.

சென்னையில், இந்தியாவின் முதல் ரயில்வே ஆட்டோ ஹப் அமைக்கப்படும்

சில திட்டங்கள் 6 மாநில அரசுகளோடும் இணைந்து செயல்படுவது போல கையெழுத்தாகி இருக்கின்றன.

ரயில்வே டிராக்குகளில் விளம்பரங்களை வைப்பதன் மூலம் புதிதாக வருவாய் ஈட்ட முயற்சி எடுக்கப்பட இருக்கின்றன.

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளிலும் மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி செய்து தரப்படும்

நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் புதிதாக அறிமுகம் செய்யப்படும்

ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பொழுதுபோக்குக்காக பண்பலை வானொலி வசதி செய்து தரப்படும்

இ-கேட்டரிங் சேவை  45 ல் இருந்து 408 ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கப்படும்

பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் இணைய தள டிக்கெட் புக்கிங் செய்ய வசதி செய்யப்படும்

முன்பதிவு பெட்டிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு

ரயில் பாதையை ஒட்டியுள்ள ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் வணிக ரீதியாக உபயோகப்படுத்தப்படும்

Clean my coach என்று எஸ்.எம்.எஸ் அனுப்பினால் நாம் இருக்கும் பெட்டிகள் சுத்தம் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது

மிசோரம், திரிபுரா போன்ற வட கிழக்கு மாநிலங்கள் அகல ரயில் பாதைகள் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டிருக்கின்றன.

2020 க்குள் ஆளில்லா க்ராசிங்குகள் இல்லாத நிலை உருவாக்கத் திட்டம்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட இருக்கின்றன.

தொலைதூர ரயில்களில் ரிசர்வேஷன்கள் இல்லாமல் முழுமையாக அன்ரிசர்வ்டு ரயில்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

ரயில் நிலைய சுவர்கள் அழகிய ஓவியங்களால் அலங்கரிக்கப்படும்

பார்கோடு தொழில்நுட்பம் கொண்ட ரயில் டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்படும்

7200 டிக்கெட்டுகள் ஒரு நிமிடத்திற்கு பதிவு செய்வது போன்று ரயில்வே சர்வர்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

400 ரயில் நிலையங்கள் பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்கிற PPP முறையில் மேம்படுத்தப்பட இருக்கின்றன.

டிக்கெட்டுகள் பதிவு செய்யப்படும் போது பெண்களுக்கு ரயில் பெட்டிகளின் மத்தியில் இருக்கைகள் ஒதுக்கப்பட இருக்கின்றன.

முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில்கள் சாமான்ய மக்களுக்காக இயக்கப்படும்.

அனைத்து ரயில்பெட்டிகளிலும் குப்பைத் தொட்டி வைக்கப்பட உள்ளன

பயோ வேக்கும் டாய்லெட்கள் ரயில்  பெட்டிகளில்  பயன்படுத்தப்பட இருக்கின்றன.

ரயில்வே தேவைகள் அனைத்தும் இனி ஆன்லைன்  ஏல   மூலம்  நடத்தப்பட  திட்டமிடப்பட்டிருக்கின்றன.

ரயில்வே ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்காக ரயில்வே பலகலைக்கழகம் அமைக்கப்படும்

2017-ம்  நிதி ஆண்டில் இந்தியாவில் 100 ரயில் நிலையங்களுக்கு  இலவச வைஃபை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

40,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு லோகோமோட்டிவ் இன்ஜின் உற்பத்தி ஆலைகளை நிறுவ முடிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மூத்த குடி மக்களுக்கான கீழ்படுக்கை வசதி 50 % அதிகரிக்கப்படும்

மக்களின் தேவைக்கேற்ப முன்பதிவு செய்யும் வசதி 2020க்குள் செய்து தரப்படும்

சென்னை- டில்லிக்கு இடையே சரக்கு ரயில் பாதை அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்

ரூ. 40 ஆயிரம் கோடியில் புதிய ரயில் பெட்டித் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்

ரயில் நிலையங்களில் 1780 தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்படும்

இந்தியாவில் இருக்கும் ஐ.டி வளர்ச்சியை முடிந்த வரை சரியாக பயன்படுத்தி ரயில்வே துறையின் பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கின்றன.

நாள் ஒன்றுக்கு 7 கிலோமீட்டர் குறுகிய தண்டவாளங்கள் அகலப் பாதைகளாக மாற்றப்படும்.

எல்ஐசி நிறுவனம் 2016 - 17-ம்  நிதி ஆண்டில் 1.5 லட்சம் கோடி ரூபாயை ரயில்வேயில் முதலீடு செய்ய  இருக்கிறது.

ரயில்வேயின் வருவாயைப் பெருக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ரயில் பயண அனுபவத்தை இனிமையானதாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


வருவாயைத் திரட்டுவதற்கான புதிய வழிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

ரயில் பாதை அமைப்பு மூலம் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேக்கு மத்திய அரசின் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு 40,000 கோடி ரூபாயாக இருக்கும்

ரயில்வே துறைக்கு கட்டணங்கள் மூலமாக 1.85 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு  நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
 
2800 கிலோமீட்டர் புதிய ரயில் தண்டவாளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்றன.
 
8720 கோடி ரூபாயை பல்வேறு சிக்கன நடவைக்கைகள் மூலம் மிச்சப்படுத்த இருக்கிறது ரயில்வே நிர்வாகம்.
 
ரயில்வே துறையின் வருவாய் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக 2016 - 17ல் வாய்ப்பிருக்கிறது.
 
2000 கிலோமீட்டர் தண்டவாளங்கள் மின்மயமாக்கப்படுகின்றன.
 

இந்த நிதி ஆண்டில் 20,000 கோடி ரூபாயை கடன் வாங்க இருக்கிறது ரயில்வே நிர்வாகம்

புதிய சரக்கு கோரிடார்களை உருவாக்க திட்டம். சென்னை முதல் டெல்லி வரையும், கரக்பூர் முதல் மும்பை வரையும், கரக்பூர் முதல் விஜயவாடா வரையுமான ரயில்வே பாதைகளை கொண்டு இந்த சரக்கு கோரிடார்கள் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கின்றன.
 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close