Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில்கள் சாமான்ய மக்களுக்காக இயக்கப்படும்!

ரயில்வே பட்ஜெட்: டில்லி - சென்னை இடையே சரக்கு ரயில் பாதை

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பாராளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்: -

* சென்னை- டில்லிக்கு இடையே சரக்கு ரயில் பாதை அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்

* ரயிகளுக்கான ஆட்டோ ஹப் சென்னையில் உருவாக்கப்பட இருக்கின்றன.

* புறநகர் வழித்தடங்கள் தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்படும்.

* ரயில்வே துறையில் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ. 50 கோடி ஒதுக்கப்படும்.

* பரிசோதனை அடிப்படையில் தானியங்கி கதவு பொருத்தப்படும்.

* ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் வணிக ரீதியான கட்டிடங்கள் கட்டப்படும்.

*  செல்போனில் முன்பதிவை ரத்து செய்ய ஒன்டைம் பாஸ்வேர்டு தரப்படும்.

* முன்பதிவு பெட்டிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு

* முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில்கள் சாமான்ய மக்களுக்காக இயக்கப்படும்.

* மூத்த குடி மக்களுக்கான கீழ்படுக்கை வசதி 50 % அதிகரிக்கப்படும்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ