Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே பட்ஜெட்டால் முதலீடுகள் இரண்டரை மடங்கு அதிகரிக்கும்! பிரதமர் மோடி கருத்து

ரயில்வே பட்ஜெட்டால் முதலீடுகள் இரண்டரை மடங்கு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட் குறித்து மோடி கூறுகையில், "ரயில்வே பட்ஜெட் தயாரித்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் ரயில்வே குழு ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள். இந்த பட்ஜெட் இந்தியாவை நவீனமயமாக்கும். இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையுடன் ஐடி மற்றும் முதலீட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பல வெற்றிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முந்தைய அரசுகளின் ரயில்வே பட்ஜெட் பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. இந்த பட்ஜெட்டால் முதலீடுகள் இரண்டரை மடங்கு அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ