Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில்வே பட்ஜெட்டும்... மோடியின் 20 மாத ஆட்சியும்...!

 

 

2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்றுதான் கூறவேண்டும்.



ரயில்வே உதிரிபாக மையமாக சென்னை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், டில்லி - சென்னை இடையிலான சரக்கு ரயில் பாதைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் ரயில் கட்டணம் உயர்த்தப்படாததும் வரவேற்கத் தக்கது.

பயணிகளுக்கு ஏமாற்றம்

ஆனாலும், கடந்த காலங்களில் தமிழகத்துக்கு அறிவிக்கப் பட்ட பல்வேறு புதிய வழித்தடங்களுக்கான ரயில் பாதை அமைப்பு, மீட்டர்கேஜ் பாதைகளை அகல பாதைகளாக மாற்றுதல், இரட்டை ரயில் பாதை திட்டங்கள் என அனைத்து திட்டங்களும் நிலுவையில்தான் உள்ளன.

கடந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு புதிய ரயில்கூட அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே நிலுவையில் உள்ள தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இன்றைய பட்ஜெட்டிலும் தமிழகத்தில் ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படதாதது தமிழக ரயில் பயணிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

20 மாத ஆட்சியில்...

பிரதமர் மோடியின் கடந்த 20 மாத ஆட்சியில் ரயில் பயணிகளுக்கான கட்டணம் 14.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் 12 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

தட்கல் முறையில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளின் கட்டணம் 33 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணம் 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், நடப்பு பட்ஜெட்டில் பயணிகளுக்கான கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்படாதது வரவேற்கத்தக்கது. ஆனாலும், இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்தோ, புதிய ரயில்வே வழித்தடங்கள் குறித்தோ அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாகத்தான் உள்ளது.

சோ.கார்த்திகேயன்

(விகடன் டாட் காமில் வெளியான கட்டுரை)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close