Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"பணக்கார இந்தியர்" பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்த முகேஷ் அம்பானி!


இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானி, இந்த வருடமும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.



 

உலக பணக்காரர் குறித்து Hurun Global Rich List 2016 ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி 21 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 26 பில்லியன் டாலராக உள்ளது.

இந்த உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 80 பில்லியன் டாலர் ஆகும். 68 பில்லியன் டாலர்கள் உடன் வாரன் பப்பெட் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடத்தில் முறையே சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் உள்ளன.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த முறை இந்தியர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

அம்பானியை தொடர்ந்து கோடீஸ்வர இந்தியர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் திலிப் ஷங்க்வி. இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 46  ஆம் இடத்தில் உள்ளார். நகரங்கள் அடிப்படையில் இந்தியாவில் மும்பை நகரில் தான் அதிகமான கோடீஸ்வரர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.கே பிரேம் குமார் (மாணவ பத்திரிகையாளர்)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP