Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் வளர்ச்சி 7 முதல் 7.5% வரை இருக்கும்; பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பீடு

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2016-17 நிதி ஆண்டில் 7-ல் இருந்து 7.5% வரை இருக்கலாம் என்று பொருளாதார ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று  (26.02.16) பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  2014-15-ன் பொருளாதார வளர்ச்சி 7.2% என்று இருந்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் 7.6% விரிவாக்கம் இருக்கும். இது உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சி என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-17 நிதி ஆண்டில் 7-ல் இருந்து 7.5% வரை இருக்கலாம். இது அடுத்த 2 ஆண்டுகளில் 8% ஆக உயரக்கூடும் என்று  மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும், உலகப் பொருளாதார நிலைமைகள் பலவீனமாக இருந்தால், இந்திய பொருளாதார வளர்ச்சி ஓரளவுக்கு பாதிப்படையும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை நீடித்தால் ஏற்றுமதி பாதிக்கப்படலாம். எதிர்பார்ப்பிற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் நுகர்வு பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ