Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் விஜய் மல்லையா ராஜிநாமா...!

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையா ராஜிநாமா செய்திருக்கிறார்.

இங்கிலாந்தை சேர்ந்த டியாஜியோ நிறுவனத்துக்கும், விஜய் மல்லையாவுக்கும் இடையே இருந்து வந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. விஜய் மல்லையாவுக்கு 515 கோடி ரூபாய் கொடுக்க நிறுவனம் டியாஜியோ ஒப்புக் கொண்டிருக்கிறது.

விஜய் மல்லையா ராஜிநாமாவைத் தொடர்ந்து யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக எம்.கே.ஷர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார். விஜய் மல்லையாவுக்கு முன்னாள் தலைவர் என்ற கவுரவ பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ