Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிஐஐ சென்னை மண்டல தலைவரானார் பொன்னுசாமி

2016-17-ம் நிதி ஆண்டின் சிஐஐ சென்னை மண்டல கவுன்சில் தலைவராக பொன்னுசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் ரசாயனம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனம்தான்  பொன் ப்யூர் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட். சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் பொன்னுசாமி உள்ளார்.  அண்மையில் நடந்த சிஐஐ சென்னை மண்டலம் கூட்டத்தில், சிஐஐ சென்னை மண்டல கவுன்சில் தலைவராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் 2015-16ல் சிஐஐ சென்னை மண்டல கவுன்சில் துணைத்தலைவராக பதவி வகித்தவர். 2015-16-ல் உறுப்பினர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.


மேலும், 2016-17ல் சிஐஐ சென்னை மண்டல கவுன்சில் துணைத்தலைவராக விஸ்வேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள வைசின் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சன்மார் குழுமத்தின் இயக்குனர்தான் விஸ்வேஸ்வரன். இவர் ஏற்கனவே சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஐஐ-தமிழக தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ