Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்


வரும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தா‌க்கல் செய்தார்.


முக்கிய அம்சங்கள்

 

*புகையிலை பொருட்களுக்கான வரி 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்வு.


* வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


* ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு அதிக நடவடிக்கை எடுக்கப்படும்.


* 60 சதுர மீட்டருக்கு (646 சதுர அடி ) வீடு கட்டுபவர்களுக்கு சேவை வரி இல்லை.


* பணக்காரர்களுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்படும்


* ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு  மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு கூடுதல் வரி விதிப்பு.


* ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு டிவிடெண்ட் மூலம் வரும் வருமானத்திற்கு 10% வரி


* கார்களுக்கு 1 சதவிகிதம் சொகுசு வரியாக விதிக்கப்படுகிறது.


* ஆப்ஷன் டிரேடிங்குகளுக்கு, STT என்று அழைக்கப்படும் செக்யூரிட்டீஸ் டிரான்ஸாக்‌ஷன் டாக்ஸ் அதிகரிக்கப்படும்.


* சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் செலுத்தும் வரி 29 சதவிகிதமாக குறைக்கப்படும்.

* ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதல் மூன்று வருடத்துக்கு வரி விலக்கு வழங்கப்படும். அதாவது 2016 - 2019 வரை இது தொடரும்.


* சிறிய அளவில் வரி செலுத்தும் மக்களுக்கு வரி வசூலிப்பு முறையை எளிமையாக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.


* என்பிஎஸ் திட்டத்தின் கீழ் வெளியே எடுக்கப்படும் பணத்துக்கு 40 சதவிகிதம் வரை வரிச் சலுகை கிடைக்கும்.


* முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ. 50 ஆயிரம் ரூபாய்க்கு வரிச் சலுகை கிடைக்கும். வீட்டின் மதிப்பு ரூ. 50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கடன் மதிப்பு ரூ. 35 லட்சத்துக்குள் இருந்தால்தான் இந்தச் சலுகையை பெற முடியும்.

 

* 2017, ஏப்ரல் 1- முதல் கார் (GAAR) சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்!


* கலால் மற்றும் சுங்க வரிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர அரசு முடிவு!

* ரூ. 5 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ. 5000 வரை சலுகை


* வீட்டு வாடகைக்கான சலுகை ஆண்டுக்கு ரூ.  24,000த்திலிருந்து ரூ. 60,000த்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.


* இந்த நிதி ஆண்டில் திட்டமிடப்படாத செலவுகள் ரூ. 14.3 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டிருக்கிறது.


* வருவாய் பற்றாகுறை 2015 - 16ல் 2.8 லிருந்து 2.5 சதவிகிதமாக குறைந்தது.

* சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்கப்படும்.


* பருப்பு விலையை கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


* வங்கியின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது.


* ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்கை குறைத்துக்கொள்ளும் அறிவிப்பால் அந்தப் பங்கு 8%
விலை உயர்ந்தது.

* இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 3.9 சதவிகிதமாக இருந்தது. அதை 2016 - 17ல் 3.5 சதவிகிதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


* 2016 - 17ல் இந்தியாவின் மொத்த செலவு ரூ. 17.78 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.


* ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஒரு நாளில் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட இருக்கிறது.


* பொதுத்துறை வங்கிகளில் 25000 கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்யப்படும்

* சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் முத்ரா திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1,80,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


* 3000 புதிய ஜெனிரிக் மருத்தகம் அமைக்கப்படும்.
 

* விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


* திட்டமிட்ட செலவுகள்  கடந்த ஆண்டைவிட  15%  உயர்வு.


* பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடு ரூ. 25,000 கோடி ஒதுக்கீடு

* மாநில அரசுகளுடன் இணைந்து 160 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

* ஃபுட் புராடக்ட், பார்மா துறைகளில் எஃப்டிஐ முதலீட்டு அளவு 100% அதிகரிக்கப்படும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.


* அணு சக்தி துறைக்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


* இன்ஃப்ரா துறையை மேம்படுத்த புதிய கிரெடிட் ரேட்டிங் உருவாக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களுக்கும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்க திட்டம்.


* அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் பயிற்சி


* நாடு முழுவதும் 1500 பன்முகத் திறன் வளர்ப்புப் பயிற்சி மையங்கள்


* 2016 - 17-ம்  நிதி ஆண்டில் 10,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம்.


* இந்தியாவின் உள்கட்டுமானத்திற்கு 2,21,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


* சாலை போக்குவரத்துகளை அதிகரிக்கும் விதத்தில் மோட்டார் வாகன சட்டங்களில் சில திருத்தங்களை கொண்டு வரத் திட்டம்.


* பேங்க்ரப்ட்ஸி மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்!


* புதிதாக இபிஎஃப் திட்டத்தில் இணையும் தொழிலாளர்களுக்கு 8.3 சதவிகித வட்டி வழங்கப்படும்


* ஆழ்கடலில் எரிவாயு எடுக்கும்  திட்டங்களுக்கு  சலுகை அளிக்கப்படும்!


 * மூத்த குடிமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்


* 75 லட்சம் நடுத்தர குடும்பத்தினர் தங்கள் எரிவாயு இணைப்பு மானியத்தை விட்டுக் கொடுத்திருக்கின்றனர்.


* 10 பொதுத்துறை மற்றும் 10 தனியார் துறை கல்வி நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்டு அதில் பயிலும் மாணவர்களுக்கு உலகத்  தரம் வாய்ந்த கல்வி பயிற்றுவிக்கப்படும்


 * மோட்டார் வண்டிகள் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்!


* தலித் மக்கள் தொழில்முனைவோராக தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள திட்டம்


* 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தலித் மக்களுக்கு எம்.எஸ்.எம்.இ யில் தனி ஹப் அமைக்கப்பட இருக்கிறது


 * ஒட்டு மொத்த கிராம புறங்கள் வளர்ச்சிக்கு 87,765 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


 * எல்பிஜி கேஸ் இணைப்பை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு வழங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


* நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.55,000 கோடி ஒதுக்கீடு!


 * உயர் படிப்புக்காக  நிதி உதவி செய்ய ரூ.1000 கோடி செலவில் தனி அமைப்பு அமைக்கப்படும்!


 * அடுத்த 3 ஆண்டுகளில் 6 கோடி நபர்களுக்கு டிஜிட்டல் கல்வி அறிவை பயிற்றுவிக்க திட்டம்.


 * டயாலிசிஸ் செய்யும் கருவிக்கு கலால் வரி கிடையாது!


* மே 1, 2018க்கு முன் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.


 *ரூ. 2.87 லட்சம் கோடி கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


* 19000 கோடி ரூபாய் கிராமப்புற சாலை மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


* 15000 கோடி ரூபாய் வட்டி சுமை குறைக்கப்பட  திட்டமிடப்பட்டுள்ளது.


* ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்!


* ஸ்வாச் பாரத் திட்டத்துக்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


 * இந்த நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.  9 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இது இதுவரை இந்தியாவில் வழங்கப்பட்ட கடன்களில் அதிகம்


* 5500 கோடி ரூபாய் மதிப்பிற்கு பயிர்க் காப்பீடு வழங்கப்படும்.


* விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இ - காமர்ஸ் சந்தையில் விற்க வழிவகை செய்யப்படும்.


* அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் வருமானம் 2 மடங்காக அதிகரிக்கப்படும்


*நீர்பாசன திட்டங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 86,500 கோடி ஒதுக்கப்படும்


   * 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு


* உலக அளவில் உலகப்  பொருளாதார வளர்ச்சி 3.4 சதவிகிதத்திலிருந்து 3.1 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.  


*  உலக அளவில் சிறந்த பொருளாதாரமாக இந்தியாவை சர்வதேச நிதியம் குறிப்பிட்டிருக்கிறது


* வரித் தாக்கல் எளிமைப்படுத்தப்படும்!


* கிராமப்புறம், சமூக வளர்ச்சி, உள்கட்டமைப்பு போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்


* மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு


* விவசாய பாசனத்தை மேம்படுத்த 17,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


 * 2020ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த திட்டம்


* அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாசனத் துறை வளர்ச்சிக்காக 86,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


* மொத்த விலை விவசாய விளைபொருட்கள் இ-மார்க்கெட் மூலம் இணைக்கப்படும்!


* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம்.


* விவசாயக் கடனுக்கான வட்டிச் சுமையைக் குறைக்க ரூ. 15,000 கோடி ஒதுக்கீடு!


* ரூரல் சடக் யோஜனா திட்டத்துக்கு ரூ. 19,000 கோடி ஒதுக்கீடு!


 * 2017-ல் பயிர் இன்ஷூரன்ஸுக்காக 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


* 5 லட்சம் விளைநிலங்கள் ஆர்கானிக் விவசாய நிலங்களாக அடுத்த 3 ஆண்டுகளில் வழங்க திட்டம்


* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்காக 38,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

 


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ