Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லீப் ஆண்டு பட்ஜெட்...!

திர்வரும் 2016 - 17-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. பொதுவாக பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் ஆகும். இந்த ஆண்டு லீப் இயர் என்பதால் பிப்ரவரி மாத கடைசி நாளான இன்று, அதாவது 29-ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் தாக்கலாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் ஆண்டு வரும் என்பதால், இன்று தாக்கலாக இருக்கும் பட்ஜெட் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
 
 
கடந்த 2012-ஆம் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரனாப் முகர்ஜி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2008-ல் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். 2004-ல் அப்போது நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். 2000-ல் அப்போது நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
 
அடுத்த லீப் ஆண்டு பட்ஜெட் 2020-ல் வரும். அப்போது யார் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ