Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உடல் நலப் பாதுகாப்புத் திட்டம்!

ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான
உடல் நலப் பாதுகாப்புத்  திட்டம்!

 
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உடல் நலத்தை பாதுகாக்க  குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான திட்டத்தை அறிவித்திருக்கிறார்.


வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் உடல் நலமில்லாமல் போனால், அவர்களை குணப்படுத்த தங்கள் வாழ்நாளில் சேமித்த பணம் அத்தனையும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால் அவர்களின் குடும்பம் மிகவும் கஷ்டத்துக்கு உள்ளாகிறது.


இத்தகைய குடும்பங்களில் உள்ளவர்கள் இனி நோய்வாய்ப்பட்டால், இனி மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள உதவும் பொருட்டு ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான மருத்துவ சேவை பெற புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.


நோய்வாய்ப்பட்டவர் 60 வயதுக்கு மேலே இருக்கும்பட்சத்தில் கூடுதலாக ரூ.30,000 ரூபாய்க்கான மருத்துவ சிகிச்சை பெற முடியும்.


இந்த திட்டத்தினால் இனி வறுமைக் கோட்டுக் கீழே உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களை செலவில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்பது வரவேற்கத்தகுந்த அம்சமே!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ