Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நன்றி. நன்றி.. நன்றி... 75 லட்சம் பேருக்கு நன்றி சொன்ன அருண் ஜேட்லி!


மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது மானியம் வேண்டாம் என்று சொன்ன 75 லட்சம் பேருக்கு  நன்றி தெரிவித்தார்.



 

மத்திய அரசாங்கம் கேஸ் எரிவாயுவை மானிய விலையில்தான் மக்களுக்கு அளிக்கிறது. இந்த மானியம் எல்லோருக்கும் அளிக்கப்படுவதால், மத்திய அரசாங்கத்துக்கான மானிய சுமை பல ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஆண்டுக்காண்டு இந்த மானிய சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் கேஸ் எரிவாயுவுக்கான மானியத்தை வேண்டாம் என்கிறவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசாங்கம் கடந்த ஆண்டு சொன்னது. இந்த அழைப்பை ஏற்று பல்வேறு அரசியல் பிரமுகர்கள், பணக்காரர்கள் என பலரும் இனி தங்களுக்கு கேஸ் மானியம் வேண்டாம் என்று தெரிவித்தனர். இந்தியா முழுக்க ஏறக்குறைய 75 லட்சம் பேர் தங்களுக்கு கேஸ் மானியம் வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்களாம். தாங்களாகவே முன்வந்து கேஸ் மானியம் வேண்டாம் என்று சொன்னதன் விளைவாக அரசின் சுமையைக் குறைத்ததால், அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.

அரசின் மானிய சுமையைக் குறைத்தவர்களுக்கு மறக்காமல் நன்றியை சொன்ன நிதி அமைச்சரை பாராட்டலாம்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ