Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் இனி மற்றவர்களுக்கு வேலை தருகிற அளவுக்கு உயர்வார்கள்



தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியை சேர்ந்த தொழில்முனைவோர்கள் அதிக அளவில் தொழில் தொடங்குவதற்காக ரூ.500 கோடியில் புதிய ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிவித்தார்.

சமீப காலமான, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் புதிய தொழில்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இத்தனை நாளும் யாரோ ஒருவரிடம் வேலை செய்துவந்த இவர்கள், இனி மற்றவர்களுக்கு வேலை தருகிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள்.

இத்தகையவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 'ஸ்டாண்ட் அப இந்தியா' திட்டத்தின் கீழ் ரூ.500 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கென ஒவ்வொரு வங்கியிலும் இரண்டு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டத்தினால் இந்தியா முழுக்க சுமார் 1.25 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ