Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஸ்கில் இந்தியா' மூலம் 76 லட்சம் இளைஞர்கள் பயன் அடைந்துள்ளனர்!



'ஸ்கில் இந்தியா' திட்டத்தின் மூலம் இன்றைய இளைஞர்களின்  திறனை வெளிக்கொண்டுவர மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் 76 லட்சம் இளைஞர்கள் பயன் அடைந்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தெரிவித்தார்.

இளைஞர்களின் திறன் வளர்ப்பதற்காக பிரதம மந்திரி கவுசல் விகசஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 1500 திறன் வளர்ப்பு மையங்கள் தொடங்கப்படும். இதற்காக ரூ.1,700 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார் மத்திய நிதி அமைச்சர்.

தொழில்முனைதல் தொடர்பான கல்வியை 2,200 கல்லூரிகள், 300 பள்ளிகள், 500 ஐடிஐகள், 50 தொழில் பயிற்சி மையங்களில் கற்றுத் தரப்படும். இதன் மூலம் இன்னும் அதிகமானவர்கள் தொழில்முனைதலில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ