Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு அரசே இ.பி.எஃப்.ஓ. 8.33% செலுத்தும்!

 

நாட்டில் வேலைவாய்ப்பினை அதிகரிக்க மத்திய அரசாங்கம் இந்த பட்ஜெட் மூலம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்காக இனி புதிதாக இ.பி.எஃப்.ஓ. திட்டங்களில் சேருகிறவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசாங்கமே 8.33 சதவிகித தொகையை செலுத்தும். என்றும் அவர் தெரிவித்தார்.

ரூ.15,000-த்துக்கும் குறைவாக சம்பளம் பெறுகிறவர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற தகுதியானவர்கள் ஆவர். இதற்காக ரூ.1,000 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜேட்லி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ