Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய பட்ஜெட் 2016: ஒரு ரூபாயில் இந்தியா என்ன செலவு செய்கிறது?

த்திய அரசுக்கு அடுத்த 2016-17-ம் நிதி ஆண்டில் கிடைக்கும் நிதி ஆதாரத்தில்,  ஒரு ரூபாய்க்கான வரவு-செலவு பற்றி பார்க்கலாம்.


 

ஒரு ரூபாயில் வரவு - செலவு:-

அடுத்த நிதி ஆண்டுக்கான (2016-17) நிதி ஆதாரத்தைப் பொறுத்தவரை, வரவில் அதிகபட்சமாக கடன் மற்றும் பிற கடன்கள் 21 பைசாவாகவும், கார்ப்பரேட் வரி 19 பைசாவாகவும், வருமான வரி மூலம் கிடைக்கும் பங்கு 14 பைசாவாகவும் உள்ளது.


செலவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கான செலவிலும், மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 23 பைசாவாகவும், கடன்களுக்கான வட்டி செலுத்துவது 19 பைசாவாகவும், பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் பங்கு 10 பைசாவாகவும் உள்ளது.


வரி வருவாய்:-

வரி வரவைப் பொறுத்தவரை மொத்த வரி வருவாய்,  2016-17ம் நிதி ஆண்டில் ரூ.16,30,888 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வருமான வரி ரூ.3,53,174 கோடியாகவும், கார்ப்பரேட் வரி ரூ.4,93,923 கோடியாகவும், சுங்க வரி ரூ.2,30,000 கோடியாகவும், கலால் வரி ரூ.3,18,670 கோடியாகவும், சேவை வரி 2,31,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 


2016-17ல் துறை வாரியாக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு

 



2015-16ம் நிதி ஆண்டை விட,  2016-17ல் கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொது சேவைகளைத் தவிர்த்து ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக போக்குவரத்து துறைக்கு ரூ.2,29,874 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

-சோ.கார்த்திகேயன்

(விகடன் டாட் காமில் வெளியான கட்டுரை)

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ