Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்களை கவராத பட்ஜெட்; சரிவில் சந்தை...!


வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். காலை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவில் தத்தளித்த மும்பை பங்குச்சந்தை, பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின் சரிவில் முடிந்தது.

இன்று மத்திய பட்ஜெட் முன்னிட்டு முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்து இருந்தனர். இதனால் இன்றைய சந்தையில் எதிர்பார்த்ததைபோலவே அதிக ஏற்றம், காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 500 புள்ளிகளுக்கும் கீழே இறங்கி வர்த்தகம் ஆனது. வர்த்தகத்தின் இறுதியில் முதலீட்டாளர்களை பட்ஜெட் கவராததால் 152.30 புள்ளிகள் குறைந்து 23,002.00 என்ற நிலையில் வர்த்தகமானது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 42.70 புள்ளிகள்  குறைந்து  6,987.05 என்ற நிலையில் வர்த்தகமானது.

விலை அதிகரித்த பங்குகள்

ஐசிஐசிஐ வங்கி 190.05 2.84%
கோடக் மகேந்திரா 630.40 2.38%
எஸ்பிஐ 158.75 1.83%
ரிலையன்ஸ் 966.65 1.72%
இன்டஸ் இன்ட் வங்கி 830.00 1.67%

விலை குறைந்த பங்குகள்


ஓஎன்ஜிசி 194.10 -10.16%
மாருதி சுசூகி 3,236.50 -5.07%
கெய்ர்ன் இந்தியா 117.95 -4.73%
பி.எச்.இ.எல் 90.85 -4.47%
இன்போசிஸ் 1,084.05 -3.31%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ