Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டி விகிதம் எதிர்பார்ப்பு... சென்செக்ஸ் சரவெடி!

பட்ஜெட்டில் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தப்படி அறிவிப்புகள் வெளியிடப்படாததால் சந்தை சரியத் தொடங்கி, ஒருகட்டத்தில் 600 புள்ளிகள் வரை சரிந்தது. அதே போல் நிப்டி 200 புள்ளிகளுக்கும் கீழ் சரிவை சந்தித்து. பின்னர் முதலீட்டாளர்களிடையே சாதகமான போக்கு காணப்பட்டதால் சந்தை ஏற்றம் பெற்றது. இவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை, வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 152.30 புள்ளிகள் சரிந்து, 23002 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 42.70 புள்ளிகள் சரிந்து, 6987.05 புள்ளிகளில் வர்த்தகம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (01.03.2016) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் குறைக்க வாய்ப்பு இருப்பதாக முதலீட்டாளர்களிடையே நம்பப்படுவதால் சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 507.05 புள்ளிகள் உயர்ந்து  23,508.41 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 153.60 புள்ளிகள் உயர்ந்து   7,139.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.
            
விலை அதிகரித்த பங்குகள்

ஐடிசி 318,25 7.64%
ஐசிஐசிஐ வங்கி 200.40 5.45%
மாருதி சுசூகி 3,377.00 4.34%
கெயில் 317.60 4.08%
ஜீ எண்டர்டெயின் 386.35 3.76%
 
விலை குறைந்த பங்குகள்

ஓஎன்ஜிசி 191.70 -1.24%
ஹெச்யூஎல் 825.60 -0.58%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 3,030.60 -0.19%
எம் அண்ட் எம் 1,225.95 -0.18%
டாடா ஸ்டீல் 248.70 -0.16%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ