Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் 2016-17: பெரிய ஏமாற்றம் அளிக்கிறது!


2016-17 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து கவின்கேர் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் சிகே.ரங்கநாதன், இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சென்னை மண்டல சேர்மன் எம்.பொன்னுசாமி கருத்து தெரிவித்துள்ளனர்.

கவின்கேர் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் சிகே.ரங்கநாதன் கூறும் போது, ''விவசாய துறை, கிராமப்புற மேம்பாட்டுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் தொழில் வளர்ச்சி மேம்படும். மக்கள் கையில் பணம் புழங்குவது அதிகரிக்கும். இதனால், இப்போது 5% வளர்ச்சியில் இருக்கும் எஃப்எம்சிஜி துறை வளர்ச்சியானது 10 சதவிகிதத்தை நோக்கி செல்லும்" என்றார்.

 

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) சென்னை மண்டல சேர்மன் எம்.பொன்னுசாமி கூறும் போது,'' நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படும் நதி நீர் இணைப்பு, சேவைகள் வரி (ஜிஎஸ்டி) குறித்த அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறாதது பெரிய ஏமாற்றம்தான்.

பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை களையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணக்கில் காட்டாத பணத்துக்கு 45% அபராத வரி விதிக்கப்படுவது மூலம் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்"  என்றார்.

 சி.சரவணன்

படங்கள்: பா. காளிமுத்து

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ