Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஃப் நிதியை எடுக்கையில் வரி விதிப்பில்லை: மத்திய அரசு விளக்கம்


தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை ஓய்வுக்கு பின் திரும்பப்பெறும்போது வருமான வரி வசூலிக்கப்படாது என்று அரசு விளக்கமளித்துள்ளது.


 

நடப்பு ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதிக்கு மேல் பி.எஃப் பணத்தை திரும்பப் பெறும் போது 60% தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை ஓய்வுக்கு பின் திரும்பப்பெறும்போது வருமான வரி வசூலிக்கப்படும் என்று வெளியான தகவல் குறித்து மத்திய வருவாய் துறை செயலர் ஹஷ்முக் அதியா விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறும்போது, "தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை ஓய்வுக்கு பின் திரும்பப்பெறும்போது வரி வசூலிக்கப்படமாட்டாது. தொழிலாலாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் 60% பங்களிப்புக்கான வட்டித் தொகை மீது மட்டுமே வரி விதிக்கப்படும். அதுவும் இந்த திட்டம் ஏப்ரல் 1, 2016-ல் தான் அமலாகும்" என்றார்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ