Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஏசிஎல் பிரச்னை: செபி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!

பிஏசிஎல் நிறுவனம் கூட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து ரூ.49,100 கோடியை திரட்டி அதை திரும்ப தராமல் மக்களை ஏமாற்றியது. இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்த செபி ரூ.7,269 கோடி அபராதம் விதித்தது.

பிஏசிஎல் நிறுவனம், மக்களிடம் வசூலித்த பணத்தில் பல இடங்களில் நிலம் வாங்கி வைத்திருந்தது. இந்த சொத்துகள் அனைத்தையும் செபி முடக்கியுள்ளது. இந்த முறைகேடு எப்படி நடந்தது என்பது குறித்தும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மக்கள் பணத்தில் வாங்கிய நிலத்தை பிஏசிஎல் நிறுவனத்தின் சில ஊழியர்கள் விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலைக் கேட்டு அந்த நிறுவனத்தில் பணம் போட்ட மக்கள் கொதித்தெழுந்தனர்.

தங்களுக்கு சேர வேண்டிய நிலத்தை பிஏசிஎல் ஊழியர்கள் விற்று வருவதை தடுக்கக் கோரி திங்கள்கிழமை காலையன்று செபி அலுவலகத்திடம் முறையிட முதலீட்டாளர்கள் கூட்டமாக வருவதாக தகவல் வெளியானது.

இதை அறிந்த காவல் துறையினர் (29.02.2016) செபி அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனினும் எந்த ஒரு முதலீட்டாளரும் செபி அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரவில்லை.

இரா.ரூபாவதி

படங்கள்: பா.சரவணக்குமார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ