Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யாரும் எதிர்பார்க்காத வர்த்தகம்... சென்செக்ஸ் 777..!

மத்திய அரசின் 2016-17 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்செக்ஸ் குறியீடு 777 புள்ளிகள் வரை அதிகரித்து காணப்பட்டது.

ஐரோப்பிய சந்தைகள் இன்று 1 சதவிகிதத்திற்கு அதிகமான உயர்வை அடைந்தது. இது இந்திய சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளதால் ஐரோப்பிய சந்தை துவங்கிய உடன் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் என்ற நிலையைத் தாண்டி 700 புள்ளிகளுக்கும் அதிகமாக அளவிற்கு உயர்ந்தது.

மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை, வர்த்தகப் பற்றாக்குறை அறிவிப்புகளுக்குப் பின் ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதி கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாக முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவும் இன்று பங்குச்சந்தையில் முதலீடு அதிகரித்தது. இதனால் இன்றைய சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டது.

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 777.35 புள்ளிகள் உயர்வில் 23,779.35 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடும் நிலையான வர்த்தகத்தைப் பெற்று 235.25 புள்ளிகள் உயர்ந்து 7,222.30 புள்ளிகளை அடைந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ