Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு ஆடிட்டிங் தேவையில்லை..?

நாடு முழுவதும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார் அருண் ஜேட்லி. இது அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் வெளிப்படையாக மக்களைக் கவரும் திட்டங்கள் அறிவிப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், சில நல்ல திட்டங்களும் அடங்கியிருப்பது அதன் சிறப்பம்சம்.


அதில் ஒன்றுதான் சிறு, குறு தொழில்முனைவோர்களின் நிதி நிலை கணக்குத் தாக்கல் முறைகளைச் சற்று எளிமைப்படுத்தியிருப்பது. அவர்களது ஆடிட்டிங் வருமான வரம்பை ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 2 கோடியாக உயர்த்தியிருப்பது போன்றவை ஆகும். அந்த வகையில் இது நிச்சயம் அவர்களுக்கு இனிப்பான பட்ஜெட்தான்.

ஏனெனில் வருமானம் ஈட்டுவதை விட அந்த வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யும் விதிமுறைகள்தான் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு மிகக்கடினமான ஒன்றாக இருக்கிறது. இவற்றை எளிமைப்படுத்துவதன் மூலம் பெரும்பாலானோர் தங்கள் தொழிலை விரிவுபடுத்த முன்வருவார்கள். இனி இவர்கள் எளிமையான கணக்குகளை நிர்வகித்தால் போதுமானது. ஆடிட்டிங் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை

"தற்போது இந்தியாவில் உள்ள 33 லட்சம் சிறு, குறு தொழில்முனைவோர்கள் இந்தத் திட்டத்தினால் பயன்பெறுவார்கள். அவர்கள் தங்களின் நிதி நிலை கணக்குத் தாக்கல்களைச் செய்ய இனி கடினப்பட தேவையில்லை. இவர்கள்தான் இந்தியாவின் 45% உற்பத்தியிலும், 40% ஏற்றுமதியிலும் பங்கு வகிக்கிறார்கள். இவர்களை மேலும் ஊக்குவிக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும்" என்று தனது உரையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ