Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கத்துக்கு கூடுதல் கலால் வரி விதிப்பு: விலை உயருமா?

தங்கம் மற்றும் வைரத்திற்கு ஏற்கெனவே இல்லாத வரி போக தற்போது கலால் வரி மேலும் 1% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தங்கம் விற்பனை பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியர்கள் தங்கத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இறக்குமதி வரி அதிகரிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டுக்கு வரி ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது தங்கம் மற்றும் வைரம் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் தங்கம் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் வீதம், சவரனுக்கு, 250 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. மக்கள் தங்கம் வாங்கத் தயக்கம் காட்டுவார்கள் என்பதால் விற்பனை பாதிக்கும் என்று தங்க நகை கடை உரிமையாளர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

இந்த கலால் வரி உயர்வை ரத்து செய்ய செய்யக் கோரி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் துவக்க போவதாக தங்க நகை கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ