Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

14 நாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்தேனா... கார்த்தி சிதம்பரம் விளக்கம்.

14 நாடுகளில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்திருப்பதாக ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்தியை கார்த்தி சிதம்பரம் மறுத்துள்ளார்.

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்து அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவும் அண்மையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தின. இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த ஆவணங்களில் லண்டன், துபாய், பிரிட்டிஷ் வர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிஸ், கிரீஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கார்த்தி சிதம்பரம் பல லட்சும் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆங்கில நாளேடு  செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதனிடையே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கார்த்தி சிதம்பரம், சட்டவிதிகளுக்கு உட்பட்டே நான் தொழில் நடத்தி வருகிறேன். என் மீதான புகாரில் உண்மையில்லை என ஏற்கனவே பல முறை விளக்கம் தரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close