Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் 2016-17: வளர்ச்சி பாதைக்கான பட்ஜெட்


பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான பட்ஜெட்டாக இருப்பதாக ஃப்யூச்சர் ஜெனரலி இந்தியா இன்ஷூரன்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "பொருளாதாரத்தை  வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான பட்ஜெட்டாக இருந்தது. இதில் இந்தியாவின் ஹெல்த்கேர் துறை அதிக வளர்ச்சி அடைவதற்காக சீரான திட்டங்கள் பட்ஜெட்டில் இருந்தது. புதிய ஹெல்த் திட்டத்தின் மூலமாக ஏற்கனவே  உள்ள ஆர்எஸ்பியெஸ் திட்டத்தை  விட  கூடுதலாக 30 ஆயிரம் ரூபாய்க்கு கவரேஜ் பெற முடியும். இதன் மூலமாக மூத்த குடிமக்களுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதலாக மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை செய்துக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின் கீழ் அதிக மருத்துவமனைகளை இணைக்கும் போது தரமான சிகிச்சை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

நாடு முழுவதும் 3,000 மருந்தகங்கள் அமைக்கும் போது மருந்து பொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உருவாகும். இந்த திட்டத்தின் மூலமாக வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் அதிக பயன்பெறுவார்கள். இதன் மூலமாக அடிமக்களின் மருத்துவ தேவைகள் சார்ந்த நிதி சுமை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புள்ளது. 

பிபிபி மாடலில் டாயலிசிஸ் சென்டர் அமைப்பது பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதாவது சிறுநீரக பிரச்னைகளின் காரணமாக ஏற்படும் வியாதிகளுக்கான மருத்துவம் தனியார் மருத்துவமனையில் மட்டும் பெரும்பாலும் உள்ளன. அரசு மருத்துவமனையில் இந்த வசதி கிடைக்கும் போது அடிதட்டு மக்கள் அதிக பயன்பெறுவார்கள். மாவட்ட மருத்துவ மையங்களிலே டாயலிசிஸ் வசதி கிடைக்கும் போது சிகிச்சைக்காக வெகுதூரம் செல்வது தவிர்க்கப்படும்.

நிர்மையா திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பிரீமியத்துக்கு  சேவை வரியிலிருந்து விலக்கு அளிப்பதால் அதிக மக்கள் இந்த திட்டத்தில் சேருவதற்கு வாய்ப்புள்ளது" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ