Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் சரவெடி... 6 காரணங்கள்!

ந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக அதிக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த செவ்வாய்(1.03.2016) அன்று  சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. அதேபோல இன்றும் காலை முதலே சென்செக்ஸ்  400 புள்ளிகளுக்கு மேல்  உயர ஆரம்பித்தது. சந்தையின் இந்த திடீர் உயர்வுக்கு என்ன காரணம் என்பதை சொல்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன் விளக்குகிறார்.

 
 
1. பட்ஜெட்!
 
பங்குச் சந்தையின் உயர்வுக்கு கடந்த திங்கள்கிழமை அன்று தாக்கலான பட்ஜெட் ஒரு முக்கிய காரணம்.  இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு வரி மாற்றங்கள் இருக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள்.  ஆனால், வரியில் பெரிய மாற்றங்கள் இல்லை. அதாவது, நீண்ட கால மூலதன ஆதாய வரி, சேவை வரி, எஸ்டிடி வரி ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், வரி விதிப்பில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யாமல் இருந்ததது சந்தை உயர்வுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
 
2. உலக சந்தைகளும் ஏற்றம்!
 
உலக சந்தைகள் அனைத்துமே ஏற்றத்தில் உள்ளதால், இந்திய சந்தையும் ஏற்றம் அடைய ஆரம்பித்துள்ளது.  ஏதாவது ஒரு நெகட்டிவ் விஷயம் நடக்கும்போது உலக சந்தைகள் சரிய ஆரம்பித்தால், இந்திய சந்தையும் சரியும். சர்வதேச சந்தைகள் தற்போது உயர்வதால், இந்திய சந்தையின் உயர்வும் தொடருவதற்கான வாய்ப்புள்ளது. 
 
3. சரிவுக்குப்பின் ஏற்றம்!
 
கடந்த இரண்டு மாதங்களாக இந்திய சந்தை அதிக இறக்கத்தைக் கண்டது. சுமார் 15 சதவிகிதத்துக்கு மேல் சந்தை சரிவடைந்தது. அதிக சரிவுக்கு பிறகு ஒரு ஏற்றம் எப்போதுமே இருக்கும். அதற்கான சூழலும் இப்போது உருவாகி உள்ளது. 
 
4. ஷார்ட் கவரிங்!
 
சந்தை இறக்கும் என நினைத்துப் பல முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை விற்றுவிட்டார்கள். ஆனால், இப்போது சந்தை மீண்டும் உயருவதால் முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். சந்தையில் அதிக முதலீடு வரும்போது சந்தை உயரும். 
 
5. வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்பு!
 
பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை குறித்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதால், மத்திய ரிசர்வ் வங்கி கூடிய விரைவில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டால் சந்தை இன்னும் உயருவதற்கான வாய்ப்பு உருவாகும்.
 
6. காலாண்டு முடிவுகள்!
 
வரும் காலாண்டு முடிவுகள் நல்ல நிலையில் வெளியானால் அதுவும் சந்தை உயர்வுக்கு ஒரு காரணமாக அமையும். காலாண்டு முடிவுகள் சரியில்லை எனில், சந்தை அடுத்த காலாண்டு வரை பக்கவாட்டு நகர்விலே இருப்பதற்கான சூழல் உருவாகும். 
 
இரா.ரூபாவதி. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ