Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜீவ் காந்தியின் வார்த்தைகளைப் பேசி ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மோடி

நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவது வழக்கம். எதற்காக முடக்குகிறார்கள் என்றே தெரியாமல் திடீர் திடீர் என்று அவையை விட்டு வெளியேறுவது, போராட்டம் செய்வது என்று எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதெல்லாம் சாதாரண நிகழ்வாகிவிட்டது. மக்களும் இதையெல்லாம் பெரிதாக எண்ணுவதில்லை. ஆனால் மோடி அது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை முடக்குவதால் நாட்டுக்கு இழப்பு ஏற்படும். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடியாமல் எம்.பி.க்களும் வருந்துவர் என்று கூறிய அவர்.

"நாடாளுமன்றம் என்பது விவாதங்களுக்கான தளம். அங்கு அரசுக்கு பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்படும். அரசும் தனது பொறுப்பை உணர்ந்து பதிலளிக்கும். எனவே நம் பொறுப்புகளை உணர்ந்து நாடாளுமன்ற மாண்பினை பாதுகாக்க வேண்டும். மக்களவை, மாநிலங்களவையை சுமுகமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இந்த வார்த்தைகளை நானாக சொல்லவில்லை. இவை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வார்த்தைகள்" என்று பேசினார்.

அவையில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும். அவ்வாறாக நடந்தால் ஜி.எஸ்.டி. போன்ற முக்கிய மசோதாக்கள் எளிதில் நிறைவேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். நாடாளுமன்ற விவாதங்களை எல்லை மீறாமல் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராஜீவ் காந்தியின் வார்த்தைகளை மோடி பேசியது அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ