Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சம்பள உயர்வு... விப்ரோ புதிய முடிவு!

நம் நாட்டின் 3 வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ தனது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க புதிய முடிவினை எடுத்துள்ளது.


இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் விப்ரோ தனது வழக்கமான முறையை தவிர்த்து ஒவ்வொரு காலாண்டும் ஊதிய உயர்வு அளிக்க திட்டமிட்டுள்ளது.

விப்ரோ நிறுவனத்தைப் பொறுத்தவரை ஊதிய உயர்வுக்கு பெல் கர்வ் முறையை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நிறுவன வளர்ச்சிக்கு ஊழியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் காலாண்டு அடிப்படையிலான செயல்திறன் ஆய்வை மேற்கொண்டு ஊதிய உயர்வை அளிக்க முடிவு செய்துள்ளது. விப்ரோ நிறுவனத்தில் மட்டும் 1,70,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ