Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 நாட்கள்.. 1,600 புள்ளிகள்... கலக்கும் சந்தை..!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (03.03.2016) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்றைய காலை நேர நிலவரப்படி சர்வதேச சந்தைகள் மற்றும் ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்ததால் இந்திய பங்குச்சந்தகளும் அதிகரித்து காணப்படுட்டது. 

இந்தநிலையில் பட்ஜெட், வரும் நிதி கொள்கை மறு ஆய்வு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஐரோப்பிய சந்தை நிலையான வர்த்தகம் மற்றும் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த 3 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது.

இதனால் இன்றைய வர்த்தகம் முழுவதும் ஏற்ற இறங்கள் இல்லாமல் 364.01 புள்ளிகள் வரை உயர்ந்து 24,606.99 புள்ளிகளை எட்டியது. சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிஃப்டி குறியீடும் இன்று நிலையான வர்த்தகத்தைப் பெற்று 7,475.60 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீடு 1,604 புள்ளிகள் வரை உயர்வடைந்துள்ளது.
          
விலை அதிகரித்த பங்குகள்


வேதாந்தா 83.95 7.42%
டாடா ஸ்டீல் 287.05 7.29%
பி.எச்.இ.எல் 103.30 6.39%
டாடா மோட்டார்ஸ் 336.70 6.18%
லார்சன் 1,207.10 6.08%
 
விலை குறைந்த பங்குகள்

ஜீ எண்டர்டெயின் 394.45 -1.20%
அல்ட்ராடெக் சிமெண்ட் 2,944.25 -0.97%
ஐசிஐசிஐ வங்கி 218.00 -0.91%
ஐடிசி 318.15 -0.44%
என்டிபிசி 126.40 -0.32%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ