Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்ல 4 சக்கரம், பின்ன 3 சக்கரம், இப்போ 2 சக்கரம்... கலக்கும் கம்பெனிகள்!

நான்கு சக்கரம், மூன்று சக்கர வாகன வாடகை சேவை வழங்கி வந்த நிறுவனங்கள் இப்போது இரண்டு சக்கர வாகன சேவையும் வழங்க முன்வந்துள்ளன.  வாடகை கார் சேவை வழங்குவதில் முன்னிலையில் இருக்கும் ஒலா மற்றும் உபர் நிறுவனங்கள் தற்போது பைக் சேவையையும் பெங்களூரில் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தச் சேவையின் மூலமாக மிகக் குறைந்த கட்டணத்தில் மக்கள் எளிதாக பயணிக்க முடியும் சூழல் உருவாகியுள்ளது.

 

 


ஒலா நிறுவனம் வழங்கும் சேவையில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.30, டிராவல் டைமில் ரூ.1 ஒரு கிலோ மீட்டருக்கு என கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையின் மூலமாகப்  போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்திலும்  குறிப்பிட்ட இடத்துக்கு எளிதாக போய் சேர முடியும். அதற்கு உறுதுணையாகத் திறமை வாய்ந்த ஓட்டுநர்கள் உதவியாக இருப்பார்கள் என ஓலா நிறுவனத்தின் சிஒஒ தெரிவித்துள்ளார்.

ஓலா நிறுவனத்துக்குப் போட்டியாக உபர் நிறுவனமும் "உபர் மோட்டோ" என்ற பெயரில் இந்தச் சேவை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அடிப்படை கட்டணம் ரூ.15, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3, டிராவல் டைம் சார்ஜ் ரூ.1 ஒரு கிலோ மீட்டருக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ