Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிப் பங்குகள் லாபம் பதிவு... சந்தை தடுமாற்றம்!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (04.03.2016) காலை நேர வர்த்தகத்தில் சற்று மந்த நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

நேற்றைய வர்த்தகத்தில் வங்கி, பொதுத்துறை நிறுவனம், மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது இருந்ததால் இந்திய பங்குச்சந்தைகள் அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் முதலீட்டாளர்கள் வங்கிப் பங்குகள் விற்று லாபம் பார்த்ததால் சந்தை சற்று இறக்கத்தில் காணப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 14.57 புள்ளிகள் குறைந்து  24,592 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 5.75 புள்ளிகள் குறைந்து   7,469 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

          
விலை அதிகரித்த பங்குகள்

ஓஎன்ஜிசி 202.00 2.43%
சிப்லா 539.00 2.26%
பஞ்சாப் நேஷனல் வங்கி 80.75 2.22%
டாடா மோட்டார்ஸ் 343.05 1.89%
பிபிசிஎல் 804.35 1.82%
 
விலை குறைந்த பங்குகள்

மாருதி சுசூகி 3,532.95 -2.10%
ஹெச்டிஎப்சி வங்கி 998.00 -1.76%
அதானி துறைமுகங்கள் 224.05 -1.52%
யெஸ் பேங்க் 748.30 -1.23%
சன் பார்மா 860.30 -1.22%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ