Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டின் வருமானத்தை அதிகரிக்க உதவும் மியூச்சுவல் ஃபண்ட்! புதுச்சேரியில் ஒருநாள் பயிற்சி

ருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவரின் ஆசையாக இருக்கும். அப்படிச் சேமிக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பது பலருக்கு தெரியாது. அதில் சிலர் தனக்குத் தெரிந்த முதலீடான சீட்டு திட்டங்களிலும், ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுகளிலும் முதலீடு செய்து வைப்பார்கள்.

 ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் அதிகபட்சமாக 7-8 சதவிகிதம்தான் வட்டி விகிதம் கிடைக்கும். சீட்டுத் திட்டங்களில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். இந்த இரு திட்டங்களை விடக் கூடுதலான வருமானம் கிடைக்க கூடிய அதே நேரத்தில் பாதுகாப்புகள் அதிகம் நிறைந்த முதலீட்டுத் திட்டங்களும் உள்ளன. அதுதான் மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புத முதலீட்டுத் திட்டம். இதில் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கு ஏற்ப வருமானமும் கிடைக்கும். அதேநேரத்தில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டை விடக் கூடுதலாக ஓரிரு சதவிகிதம் வருமானமும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் பலருக்கு இந்தத் திட்டம் குறித்து தெரியாதால் இதில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது, நல்ல ஃபண்டுகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றது, எஸ்ஐபி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன, போர்ட்ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமான பயிற்சி வகுப்பை மார்ச் 13ம் தேதி புதுச்சேரியில் நாணயம் விகடன் ஏற்படு செய்துள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.3,000 மட்டுமே. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் http://bit.ly/1MZ6QeD என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: +91 98409 24910

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ