Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண்டம்விட்டு கண்டம்... உற்பத்தியை உயர்த்த அசோக் லேலண்ட் அதிரடி திட்டம்!


அசோக் லேலண்ட் நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளில் தனது உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

மத்திய கிழக்கு பகுதியான ராஸ் ஆஸ் கைமாவில் உள்ள  பஸ் தயாரிப்பு உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கையை அசோக் லேலண்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் வடிவமைப்பு, சர்வீஸ் டிரைனிங் சென்டர் ஆகியவையும் இருக்கும்.

இந்த விரிவாக்க திட்டத்தின் மதிப்பு 10 மில்லியன் டாலர் ஆகும். இப்போது இருக்கும் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 12 பஸ்களை தயாரிக்க முடியும். இதை 2016ம் ஆண்டு இறுதிக்குள் 24 பஸ்கள் தயாரிக்கும் தொழிற்சாலையாக விரிவாக்கப்படும்.

இதுமட்டும் இல்லாமல் கென்யா, ஐவரி கோஸ்ட் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள தம்மம் தொழிற்சாலைகளில் கனரக வாகனங்களின் பகுதிகளை அசம்பிளி செய்யும் வசதியை ஏற்படுத்தவும் அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ