Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாம் பாலினத்துக்கும் சம உரிமை வழங்கிய எல்ஐசி!

எல்ஐசி தனது இன்ஷூரன்ஸ் விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

வழக்கமாக இன்ஷூரன்ஸ் படிவத்தில் பாலினம் என்ற இடத்தில் ஆண், பெண் என குறிப்பிடும் வகையில் இருக்கும். ஆனால், இன்ஷூரன்ஸ் விண்ணப்ப படிவத்தில் மூன்றாம் பாலினத்தை குறிப்பிடும் வகையில் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு கூறி இருந்தது.

 

இது குறித்து இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்தன. இந்த நிலையில் இப்போது மூன்றாம் பாலினத்தை இன்ஷூரன்ஸ் விண்ணப்ப படிவங்களில் எல்ஐசி இணைத்துள்ளது.

சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலினத்தின் அடிப்படையில் பிரீமியம் தொகையை வடிவமைக்கின்றன.  பெண்கள் அதிக நாட்கள் வாழ்வார்கள் என்ற அடிப்படையில் குறைவான பிரீமியத்தை வசூலிக்கின்றன. ஆனால் எல்ஐசி அனைத்துப் பாலினத்துக்கும் ஒரே மாதிரியான பிரீமியத்தை வசூலித்து வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close