Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரத்தின் கடைசி.. 4வது நாளாக உயர்ந்த சந்தை...!

வாரத்தின் கடைசி நாளான இன்று (04.03.2016) இந்தியப் பங்குச் சந்தைகள் மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்றைய காலை நேர நிலவரப்படி முதலீட்டாளர்கள் வங்கிப் பங்குகளை விற்று லாபம் பார்த்ததால் சந்தை சற்று இறக்கத்தில் இருந்தது. வர்த்தகத்தின் இறுதியில் சந்தை உயர்வில் முடிவடைந்துள்ளது.

பட்ஜெட், வரும் நிதி கொள்கை மறு ஆய்வு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஐரோப்பிய வர்த்தகம் மற்றும் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த 4 நாட்களில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கும் மேல் உயர்வடைந்தது.

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 39.49 புள்ளிகள் உயர்ந்து 24,646.48 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு 9.75 புள்ளிகள் உயர்ந்து 7,485.35 புள்ளிகளை அடைந்தது.
         
விலை அதிகரித்த பங்குகள்
பஞ்சாப் நேஷனல் வங்கி 83.00 5.06%
பி.எச்.இ.எல் 107.60 4.16%
வேதாந்தா 87.40 4.11%
கோல் இந்தியா 325.15 3.52%
பிபிசிஎல் 815.20 3.20%
 
விலை குறைந்த பங்குகள்

ஹெச்சிஎல் டெக் 835.40 -2.78%
ஐடியா செல்லுலார் 105.65 -2.49%
டெக் மஹிந்திரா 451.25 -2.27%
ஏஷியன் பெயின்ட்ஸ் 865.80 -1.64%
சன் பார்மா 856.80 -1.62%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ