Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் 12,000க்கு ஆப்பிள் ஐபோன்..!


ஆப்பிள் ஸ்மார்ட்போனான ஐபோன் 5எஸ் ரூபாய் 12,000 விலைக்கு விற்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஐபோன் விலை அதிகமாக இருப்பதால் இதனை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனால் ஒவ்வொரு புதிய ஐபோனை வெளியிடும் போதும் பழைய ஐபோன் பதிப்பின் விலையை பாதியாக குறைத்து விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம்.


இந்த நிலையில் வரும் மார்ச் 22-ம் தேதி ஐபோன் எஸ்ஈ (iPhone SE) பதிப்பு வெளியாக உள்ளது. இதையொட்டி ஐபோன் 5எஸ் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐபோன் 5எஸ் விலை குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் விலை குறைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அப்படி குறைக்கும் பட்சத்தில் தற்போதைய விலையான ரூ.21,000 என்பதில் இருந்து ரூ.12,000 ஆக குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ