Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட்டில் வந்த சலுகையை கொண்டு எந்தந்த பிரிவுகளில் திருப்தியடையலாம்? அருமையான ஐடியா

''அந்த சலுகையை கொண்டு வரப் போகிறது; இந்த சலுகையை தரப்போகிறது..." என ஏகமாய் எதிர்பார்ப்புக்கு உள்ளான மத்திய பட்ஜெட் -'வந்த சலுகையை கொண்டு திருப்தியடையுங்கள்' என்று ஆறுதல் சொல்வது போல் அமைந்து விட்டது. அதிலும் மாத சம்பளக்காரர்களான ஊழியர்கள்தான் இந்த ஆறுதல் அணுகுமுறைக்கு ஆட்பட்டவர்கள்.

பணியில் உள்ளோர்க்கு 2,50,000/- அகவை அறுபதை எட்டியவர்களுக்கு 3,00,000/-! வாழும் வயது எண்பதெனில் 5,00,000/-! என்ற வரி வரம்பு சற்றும் வளர்ச்சி அடையவில்லை என்ற போதிலும் பின்கண்ட மூன்று சலுகைகளில் முகமலர்ச்சி அடைவோர் அநேகம் பேர் இருக்கக் கூடும்.

வரிக்கு உரிய வருமானம் ரூ.5,00,000/-க்கு உட்பட்டு இருப்பின் வரித்தள்ளுபடி ரூ5,000/- என்பதுதான் பலருக்கும் பயன் அளிக்கும் பணச்சலுகை 'இந்த நிதியாண்டு வரை நாம் வருமான வரிக்கு உட்படவில்லை; வரும் ஆண்டில் வருமான வரம்பு உயர்த்தப்படாத பட்சத்தில் நாமும் வரி செலுத்த வேண்டியதுதான்' என்று நினைக்கும் படியாக ரூ.5,00,000/-ன் விளிம்பில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு வரித்தள்ளுபடி ரூ2,000/-லிருந்து 5,000/- ஆக உயர்த்தப்பட்ட வகையில் பலனோ பலன். காரணம் அதிகரித்துள்ள ரூ3,000/- வரித்தள்ளுபடி இனி வரப்போகும் வருமான அதிகரிப்பில் ரூ.30,000/-க்கு வரியின்றி தடுத்து விடும் என்பதுதான்.

மேற்கண்ட ரூபாய் 5,000/- வரித்தள்ளுபடி என்ற சலுகையின் பரப்பளவு அதிகம் என்பதை தெரிந்து கொள்ள, வரிவிலக்கு என்று சொல்லப்படும் வருமான வரிச்சலுகையின் உட்பிரிவுகளை தெரிந்து கொள்வது அவசியம்.

வரிச்சலுகை நான்கு உட்பிரிவுகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

1. வருமானம் என்ற கணக்கில் சேர்க்கப்படாத வரவுகள்

அ) இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையோ நான்கு ஆண்டுக்கு ஒரு முறையோ குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தரப்படும் விடுப்பு பயண சலுகை (LEAVE TRAVEL CONCESSION) தொகை.

ஆ) ஓய்வு பெறும் ஊழியர்க்கு தரப்படும் பணிக்கொடை (DEATH CUM RETIREMENT GRATUITY) தொகை

இ) ஓய்வு பெற்ற பின் வழங்கப்படும் ஓய்வூதியத்தை (மூன்றில் ஒரு பங்கு) ஒப்படை செய்து பெறப்படும் பணம். இது COMMUTATION OF PENSION.

ஈ) ஓய்வுக்குப் பின் நிலுவையில் உள்ள ஈட்டிய விடுப்பை ஒப்படை செய்து பெற்றுக் கொள்ளும் பணம் (மாநில அரசு ஊழியர்களுக்கு அதிக பட்சம் எட்டு மாத ஊதியம்; மைய அரசு பணியாளர்களுக்கு பத்துமாத ஊதியம்)

உ) ஆட்குறைப்பு மூலம் பணி இழப்போர்க்கு தரப்படும் ஈட்டுத்தொகை (RETRENCHMENT COMPENSATION)

ஊ) முதிர்வடைந்த லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி மீது தரப்படும் தொகை

எ) வைப்பு நிதியில் பெறப்படும் தொகை
-இத்துடன், மேலும் சில அலவன்ஸ் எனப்படும் படித்தொகை இவையெல்லாம் வருமானம் என்று கணக்கிடப்படுவதில்லை.

2. வருமானம் என கணக்கிடப்பட்ட தொகையில் கழிவுத்தொகை பிரிவு 16ன்படி (DEDUCTIONS FROM INCOME)
அதாவது அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம் சிறப்பு ஊதியம் மற்றும் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மருத்துவப்படி மற்றும் பிற ஈடுகட்டும் படிகள் ஊழியருக்கு மாதந்தோறும் தரப்பட்டிருக்கும். ஆண்டு முழுமையும் பெற்ற இவ்வகை வரவுகளை மாத வாரியாக கூட்டி கணக்கிட்டால் கிடைக்கும் தொகைக்கு ஒட்டு மொத்த வருமானம் (GROSS TOTAL INCOME) என்று பெயர்.

ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5,000/- வரித்தள்ளுபடி என்பது இந்த GROSS TOTAL INCOME-ன் அடிப்படையில் அல்ல!
*தொழில்வரி
* கேளிக்கை படி
* ஊழியரால் பட்டுவாடா செய்யப்பட்ட வாடகை
* வீட்டுக்கடன் மீதான ஆண்டு வட்டி
-ஆகியவற்றின் கூட்டுத் தொகையை கழித்த பின் வரும் நிகர தொகையே வரிக்குரிய வருமானம் எனப்படுகிறது. (TOTAL TAXABLE INCOME) உதாரணம் பின்வருமாறு:

1. ஊதியம் 25400x12 =            3,04,800
2. அகவிலைப்படி @119% = 3,62,712
3. வீட்டு வாடகைப்படி =       12,000
4. மருத்துவப்படி =                  1,200
5. போனஸ் =                             1,000
                                                 --------------------
                                                        6,81,712

 

LESS வீட்டுக்கடன் வட்டி     1,79,268
தொழில் வரி                               2,448
(-) 181716
                                                   ------------------
                                                          4,99,996

இந்த டாக்ஸபிள் இன்கம் தான் ரூ.5,000/- வரித்தள்ளுபடிக்கு அடிப்படை. எனவே இவருக்கு வரித்தள்ளுபடி கிடைக்கும். அதாவது சேமிப்பு இனங்களை மேலும் கழித்தது போக.

80 c

சேமநிதி சந்தா: 84,000
வீட்டுக்கடன் அசல்: 36,600
எல்.ஐ.சி.: 4,400
பிற இனங்கள்: 25,000
-------------------
கூடுதல்: 1,50,000

Taxable Income 4,99,996
(-) 80cயின் கீழ் சேமிப்பு (-) 1,50,000
வரிக்குரிய வருமானம் 3,49,996

வரிவிலக்கு பெற்ற வருமானம் (-) 2,50,000

வரிக்கணக்கீட்டுக்கு உரிய தொகை: 99,996
10% வரி: 9,999
பத்து ரூபாய்க்கு சரி செய்த தொகை: 10,000
வரித்தள்ளுபடி (-) 5,000
------------
செலுத்த வேண்டிய வரி 5,000
2% + 1% உபரி வரி 100
subcharge 50
செலுத்த வேண்டிய மொத்த தொகை: 5,150

சேமிப்பு என்பது மூன்றாவது சலுகை
வரித்தள்ளுபடி (REBATE) நான்காவது சலுகை.

ஆக மொத்தம் வரிச்சலுகையின் உட்பிரிவுகள் நான்கு.

இப்படி பார்க்கும் போது மேற்கண்ட எடுத்துக் காட்டில் அடங்கிய ஊழியர்க்கு சலுகை ரூ.3,000/-

வரி விளிம்பில் இருந்தோர்க்கு மேற்கண்ட சலுகை மூலம் ரூ.50,000/- வரைக்குமான வருமான வரியிலிருந்து மீட்சி பிரிவு 80CCG, 80D, 80DD, 80U, 80G போன்ற இனங்களின் கீழ் தகுதி இருப்பின் வரி 'O'' ஆகக் கூடும்.



வருமான வரியிலிருந்து ஒட்டு மொத்தமாக விலக்களிக்கப்பட்டோர் உண்டா?

உண்டு

பணியில் இருப்பவர்களுக்கு வருமான வரி கணக்கிடுவது போலத்தான் ஓய்வு பெற்று மாத ஊதியம் பெறுவோர்க்கும் வருமான அடிப்படையில் வரி கணக்கிடப்படுகிறது. எனினும், மத்திய அரசு அல்லது மாநில அரசுப் பணியில் இருந்து, 'பரம் வீர் சக்ரா', 'மகாவீர் சக்ரா' மற்றும் 'வீர் சக்ரா' விருது பெற்றோர்க்கு வழங்கப்படும் ஓய்வூதியம் எவ்வளவு தொகையாயினும் வருமான வரி கிடையாது.

ரூபாய் ஒரு கோடிக்கு மேல் மேற்பட்ட வருமானத்தின் மீதான உபரி வரி (SUB CHARGE) பதினைந்து சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமான வரியில் தான் மாநில அரசுக்கு உரிய பங்கு தொகை வழங்கப்படும். உபரி வரி (SUB CHARGE) மூலம் கிடைக்கும் தொகை முழுதும் மத்திய அரசுத் தொகுப்புக்கே (Consolidated and of the Union) உரியது.

ப.முகைதீன் சேக்காவூது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ