Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்கவுன்ட் ஓபன் பண்ண சொன்னேள் பண்ணோம்... ஆனா பணம்...?

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்பது நாடு முழுவதும் அனைத்து வங்கிகளாலும் பரப்பப்பட்டது. அதன் தாக்கம் வங்கிக் கணக்கு பற்றிய எந்த அறிவும் இல்லாத கடைக்கோடி பாமரர்களும் கணக்குத் தொடங்க வங்கி வாசலில் போய் வரிசையில் நின்றனர்.

அந்தத் திட்டத்தில் கணக்கு தாரருக்கு ஒரு லட்சம் வரை காப்பீடு உண்டு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் மக்களுக்குத் தரப்பட்டு வரும் மானியத் தொகையை வங்கிக் கணக்கு மூலம் பரிமாற்றம் செய்ய இந்த வங்கிக் கணக்கு திட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என்று அரசு கூறியது.

இதன் விளைவு கடந்த ஒரு வருடத்தில் அனைத்து மாநிலங்களும் கிட்டதட்ட 100% கணக்கு தொடங்கி வெற்றி வாகை சூடியது. ஜனவரி 31-ம் தேதி நிலவரப்படி 21 கோடி வங்கிக் கணக்கு இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

அக்கவுன்ட் ஓபன் பண்ணியாச்சு... பணம்?

ஆனால்,  ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் 30% வங்கிக் கணக்குகளில் இன்றுவரை ஒரு ரூபாய் கூட இருப்பு வைக்கப்படவில்லை.

மக்கள் வாங்கும் கேஸ் போன்ற பொருட்களுக்கு கொடுக்கப்படும் மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு கூறியிருந்தது. ஆனால் அதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

2015-ல் அரசு வழங்கிய மானியத்தின் மொத்த மதிப்பு ரூ. 266,700 கோடி. ஆனால் இவை முழுமையாக மக்களைச் சென்று சேர்ந்ததா என்றால் இல்லை. ஒரு திட்டம் தானாக நடந்துவிடாது... அது குறித்தும், பயன்படுத்தவும் மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்த விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த தவறுவதுதான் இதற்கெல்லாம் காரணம். இதற்கு எப்போது அரசு தயாராகிறதோ அப்போதுதான் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்று சேரும்.

ஜெ.சரவணன்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ