Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்!

மெட்டல் & ஆயில்

 
தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் போக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியா நிவேஷ் நிறுவனத்தின் இயக்குநர்  மனோஜ் குமார் ஜெயின் கூறுகிறார்.
 
கச்சா எண்ணெய்!

 

 ''கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்வதற்கு உதவியாக இருக்கும் ரிக் இயந்திரங்களின் எண்ணிக்கை  படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அதாவது கடந்த பிப்ரவரி 19ம் தேதி நிலவரப்படி  அமெரிக்காவின் ரிக் எண்ணிக்கை 400 வரை குறைந்துள்ளது. 10வது வாரமாக ரிக் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. 2009 டிசம்பர் மாதத்தில் இருந்த அளவுக்கு ரிக் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய்யின் ஏற்றுமதி ஒரு நாளைக்கு 1.65 மில்லியன் பேரலாக இருக்கும் என ஈரான் எதிர்பார்க்கிறது. இதற்கு முன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் பேரல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
 
இதுதான் அதிகபட்ச அளவாகும். ஓபெக் அமைப்பு விரைவில் காச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் கடந்த வியாழன் அன்று ஒரே நாளில் ஒரு மாத அதிகபட்ச விலை உயர்வை அடைந்துவிட்டது.  20 மாதங்களுக்கு முன் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 115 டாலராக இருந்தது. விரைவில் ஒபெக் மற்றும் ஒபெக் இல்லாத நாடுகள் ஒன்று கூடி உற்பத்தி குறைப்பு பற்றி பேசி விலையை 50 டாலருக்கு அருகாமையில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   ரஷ்யா, சவுதி அரேபியா உள்ளிட்ட முக்கிய நான்கு நாடுகள் ஜனவரி மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை விட அதிக அளவு உற்பத்தி செய்ய மாட்டோம் என்ற முடிவை எடுத்தால் கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  . மேலும் கடந்த புதன் அன்று அமெரிக்காவின் இஏஐ (Energy Information Administration) வின் அறிக்கைப்படி கடந்த வாரத்தை விட 10.4 மில்லியன் பேரல் கையிருப்பு  அதிகரித்துள்ளது. இது பிப்ரவரி 26 நிலவரம் ஆகும்.
 
தற்போதைய கையிருப்பான 518 மில்லியன் பேரல் என்பது இந்த மாதத்திற்கான மிக அதிகபட்ச அளவாகும். ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது ரூ.2350 க்கு அருகில் வர்த்தகமாகிறது. இது சப்போர்ட் விலையான 2280-ஐ உடைத்தால் 2210, 2160, 2115 வரை சரியலாம். வாராந்திர முடிவில் 2400க்கு மேல் முடிந்தால், விலை 2480-2530 வரை அதிகரிக்கலாம். குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் டெக்னிக்கலாக எற்றம் இருப்பதுபோல் தெரிகிறது. குறுகிய கால வர்த்தகர்கள் 2320-ல் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 2280, டார்கெட் 2400. வரும் வாரங்களில் 2160-2115க்கு அருகில் வாங்கி 2700-2850க்கு விற்கலாம். இதற்கு ஸ்டாப்லாஸ் 1800. 
 
தங்கம்!
கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை ஒரு விதமான ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. ஆனால் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1200 டாலருக்குக் கீழ் சரியவில்லை. தங்கத்தின் விலை கடந்த வியாழன் அதிகபட்சமாக 1264 டாலர் அளவுக்கு வர்த்தகமானது. இது கடந்த 13 மாதங்களில் அதிகபட்ச உயர்வு ஆகும். இந்த நிலையில் எஸ்பிடிஆர் கோல்டு எக்ஸ்சேஞ் டிரேட் ஃபண்ட் தனது கையிருப்பை அதிகப்படுத்தியுள்ளது. இது 2014 செப்டம்பர் மாதத்தில் இருந்த அளவு ஆகும். 
 
வெளிவர இருக்கும் அமெரிக்காவின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் வரும் வாரத்தில் தங்கத்தின் விலைப்போக்கு இருக்கும். தங்கத்திற்கான சப்போர்ட் 29200 என்ற அளவிலும் ரெசிஸ்டென்ஸ் 29900 என்ற நிலையிலும் இருக்கும். மூன்று நாட்கள்  தொடர் ஏற்றத்திலும் வாராந்திர அளவில் 29900-க்கு மேல் சென்றால், விலை 30,400-லிருந்து 30,700 வரை செல்அதுவே 29200க்கு கீழ் சென்றால் விலை 28900-28600 வரை சரியும். 28400 என்பது பெரிய சப்போர்ட் ஆக உள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும். ரூபாயின் மதிப்பு 69-லிருந்து 67.50 வரை இறங்கி உள்ளது. இதன் மிக முக்கிய சப்போர்ட்டாக 66.80 உள்ளது. டெக்னிக்கலாக விலை குறைய வாய்ப்பு குறைவாக உள்ளது.  வர்த்தகர்கள் 29500க்கு அருகில் வாங்கலா. ஸ்டாப்லாஸ் 29,200 டார்கெட் 29,900-30,400."


இரா.ரூபாவதி. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ