Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிராபிக்கில் இருந்து தப்பிக்க ஹெலிகாப்டர் சர்வீஸ்; நபருக்கு ரூ.5,000 கட்டணம்! பெங்களூரில் அதிரடி

டிராபிக்குப் பெயர் போன நகரம் பெங்களூரு. அதிலும் பெங்களூரு நகரத்திலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் டிராபிக் மிக அதிகம். இந்த டிராபிக்கிலிருந்து தப்பித்து, சரியான நேரத்தில் விமான நிலையத்துக்குப் போய் விமானத்தைப் பிடிப்பது என்பது பலருக்கும் டென்ஷன் நிறைந்த அனுபவமாகவே இருக்கிறது. டிராபிக் காரணமாக விமானத்தை தவறவிட்டவர்கள்கூட பலர் உண்டு. டிராபிக்கில் இருந்து தப்பிக்க ஹெலிகாப்டர் சர்வீஸ்! பெங்களூரில் அதிரடி

பலருக்கும் இந்த பிரச்னை இருப்பதை ஜெட்செட்கோ (JetSetGo) நிறுவனம் இதற்கொரு புதுமையான தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறது. பெங்களூரு நகரத்திலிருந்து விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டர் சேவை ஆரம்பித்ததுதான் இந்த தீர்வு. பெங்களூருவின் பல பகுதிகளில் உயரமான கட்டடங்களில் ஹெலிபேடுகளை அமைத்திருக்கிறது இந்த நிறுவனம். நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடி உங்கள் செல்போன் மூலம் ஓலா காரை புக் பண்ணுகிற மாதிரி, இனி இந்த ஹெலிகாப்டரை புக் செய்தால், நீங்கள் சொல்லும் நேரத்துக்கு உங்களுக்காக ஹெலிகாப்டர் தயாராக வந்து நிற்கும்.

பெங்களூருவில் உள்ள உயரமான 25 இடங்களில் ஹெலிபேடுகளை அமைக்க அனுமதி வாங்கி இருக்கிறது இந்த ஜெட்செட்கோ நிறுவனம். இன்னும் நூறு இடங்களில் ஹெலிபேடுகளை அமைக்க அரசாங்கத்துக்கு விண்ணப்பம் செய்திருக்கிறதாம்.

இந்த ஹெலிகாப்டர் சேவையின் மூலம் பெங்களூருவின் எந்த பகுதியில் இருந்தும் விமான நிலையத்துக்கு சுமார் 23 நிமிடங்களில் சென்றுவிட முடியுமாம். இந்த ஹெலிகாப்டர் சேவையைப் பெற ஒரு நபருக்கு ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை கட்டணம் விதிக்கிறது இந்த நிறுவனம்.

அய்யோ! அவ்வளவு பணமா! என்று வாயைப் பிளக்காதீர்கள். இது பல ஆயிரம் ரூபாய் செலவழித்து நாடு விட்டு நாடு செல்லும் மெகா பிசினஸ்மேன்களுக்கு! இல்லையென்றால் அடிக்கடி விமானப் பயணம் செய்யும் சாதாரண மனிதர்கள் கொஞ்சம் முன்கூட்டியே ஏசி பஸ்ஸில் ஏறிக் கிளம்பிவிட வேண்டியதுதான்!

- ஆகாஷ்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ