Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் விற்பனைக்கு வருகிறது கோல்டு பாண்டு!

 

மத்திய அரசு மூன்றாவது முறையாக கோல்டு பாண்டுகளை விற்பனை செய்கிறது. இதன் மூலமாக ரூ.1050 கோடி திரட்டப்படுகிறது. கோல்டு பாண்டு மார்ச் 8 - 14ம் தேதி வரை விற்பனை செய்யப்படும். பாண்டுகளை வாங்கியவர்களுக்கு அதற்கான பத்திரம் மார்ச் 29ம் தேதி கிடைக்கும் என  மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த பாண்டுகளை வங்கி, ஸ்டாக் ஹோல்டின் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா, குறிப்பிட்ட சில அஞ்சலகம் ஆகிய இடங்களில் வாங்கலாம். 

இந்த திட்டம் முதல் முறையாக 2015 நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.246 கோடிக்கு பாண்டுகள் (915.95 கிலோ தங்கம்) இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டது. 
இரண்டாவது முறையாக ஜனவரி மாதத்தில் ரூ.798 கோடி மதிப்புள்ள பாண்டுகளில் முதலீடு (3071 கிலோ தங்கம்) செய்யப்பட்டது. 

கோல்டு பாண்டு திட்டம் குறித்து அதிக அளவில்  விளம்பரம் செய்து, அதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பாண்டுகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விலக்கு அளிக்கப்படும் என 2016-17 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கோல்டு பாண்டுகள் 5,10, 50 மற்றும் 100 கிராம் மதிப்பில்  கிடைக்கும். ஒரு வருடத்துக்கு அதிகபட்சமாகத் தனிநபர் ஒருவர் 500 கிராம் வரை வாங்க முடியும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ