Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்போதைக்கு ஐபிஓ வரும் எண்ணமில்லை; ஓலா திட்டவட்டம்!

புதிதாக தொடங்கப்படும் எந்த நிறுவனமாக இருந்தாலும், அது ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்தவுடன் ஐபிஓ (Initial Public Offer) வரவே விரும்பும். தொழிலை விரிவுப்படுத்த தேவையான நிதியைப் பெறவும், ஏற்கெனவே முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறவும் இந்த ஐபிஓ மிகப் பெரிய அளவில் பயன்படுகிறது.

ஆனால், வாடகை கார் சேவை நிறுவனமான ஓலா, இப்போதைக்கு தாங்கள் ஐபிஓவுக்கு வரப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறது. குறுகிய காலத்தில் எங்களுக்கு அந்த மாதிரியான லட்சியம் எதுவும் இல்லை என்று சொல்லி இருக்கிறார் ராஜீவ் பன்சால். இவர் ஓலாவின் சி.எஃப்.வாக இருக்கிறார்.
ஓலா நிறுவனம் ஐபிஓ வருமா என்று அவரிடம் கேட்டபோது, ''இப்போதைக்கு ஐபிஓ மூலம் நிதி திரட்டுவதற்கான திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு தேவையான நிதி இருக்கவே செய்கிறது. அப்படி இருக்கும்போது மீண்டும் ஏன் நாங்கள் நிதி திரட்ட வேண்டும்?'' என்று பதில் சொல்லி இருக்கிறார் ராஜீவ் பன்சால்.

கடந்த நவம்பர் மாதம் 500 மில்லியன் டாலர் அளவுக்கு இந்த நிறுவனம் நிதியைத் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ