Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகாசிவராத்திரி... இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (07.03.2016)மஹாசிவராத்திரியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று ஈக்விட்டி, அந்நிய செலாவணி சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகளுகு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 



 

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 14.57 புள்ளிகள் குறைந்து  24,592 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 5.75 புள்ளிகள் குறைந்து   7,469 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரத்தில் மட்டும் பட்ஜெட், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, இந்திய சந்தையில் அன்னிய முதலீடு அதிகரிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் சந்தைகள் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்தது.

சென்ற வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 39.49 புள்ளிகள் உயர்ந்து 24,646.48 புள்ளிகளும், நிஃப்டி குறியீடு 9.75 புள்ளிகள் உயர்ந்து 7,485.35 புள்ளிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ