Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயரும் கார் இன்ஷூரன்ஸ் பிரீமியம்!

சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்க வேண்டும் என்பது சட்டம். வாகனங்களின் பாலிசியை பொறுத்தவரை தனக்கான கவரேஜ், மூன்றாம் நபருக்கான கவரேஜ் என இரண்டு வகை இருக்கும். இதில் மூன்றாம் நபர் கவரேஜ்  கட்டாயம். இந்த மூன்றாம் நபர் கவரேஜ் பாலிசிக்கான பிரீமியம் 9-30 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரீமியம் மாற்றி அமைப்பதற்கான வேலைகளை ஐஆர்டிஏஐ செய்து வருகிறது. 


மோட்டர் பாலிசியில் மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான பிரீமியம் பணவீக்க விகிதம் மற்றும் க்ளெய்ம் விகிதத்தின் அடிப்படை ஒவ்வொரு வருடமும் மாற்றி அமைக்கப்படும். 

1000 சிசி-க்கு குறைவான எஞ்ஜின் உள்ள கார்களுக்கு 30 சதவிகித பிரீமியம் உயர்வும், 1000 சிசி-க்கு அதிகமான கார்களுக்கு 25 சதவிகிதமும் பிரீமியம் அதிகரிக்கப்படலாம். 350 சிசிக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 10-15 சதவிகித பிரீமியம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் 350சிசி-க்குள் இருக்கும் வாகனங்களுக்கு 10 சதவிகிதம் பிரீமியம் குறைக்க ஐஆர்டிஏஐ திட்டமிட்டுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் கருத்துகளை கேட்டறிந்தபின் ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அமல்படுத்த முடிவு செய்யப்பட உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ