Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்க பாருப்பா, இதுதான் ஃபிளிப்கார்டின் பிக் ஷாப்பிங் டே...!

வ்வொரு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விதவிதமான ஆஃபர்களை அறிவித்து கவர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே 4 முறை "பிக் ஷாப்பிங் டே" என்ற பெயரில் ஆஃபரை அறிவித்து கொண்டாடிய ஃபிளிப்கார்ட் நிறுவனம், இந்த முறையும் இதுபோன்ற ஆஃபரை அறிவித்துள்ளது.

ஹோலி மற்றும் மஹாசிவராத்ரி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் மீண்டும் இந்த "பிக் ஷாப்பிங் டே" என்ற சூப்பர் விற்பனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் இன்று மார்ச் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ''பிக் ஆப் ஷாப்பிங் டே'' என்ற ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர்கள் கிடைக்க உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் மூலமும் நீங்கள் பர்சேஸ் செய்யலாம். இதற்கு முன்னர் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டது.

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவில் வாங்கும் புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக டெலிவரி செய்யப்படும். அதுமட்டும் இல்லாமல் லெனோவா K3 நோட், மோட்டோ ஜி 3ர்டு ஜென், ஆப்பிள் ஐபோன் 6, ஹானர் மொபைல்போன் உட்பட பல ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகை. ஃபேஷன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் மீது மிகப் பெரிய தள்ளுபடி. ஒரே நாளில் டெலிவரி உட்பட பல சலுகைகளை ஃபளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் ஏற்கெனவே "பிக் பில்லியன் டே"ல் சொதப்பல்களை தந்த ஃப்ளிப்கார்ட் இந்த முறை என்ன செய்ய போகிறது என்பது பொறுத்து இருந்து பார்க்கலாம்.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close